அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' |
செய்வதற்கும், சொல்வதற்கும் பலரிடம் வித்தியாசம் இருக்கும். அவர்கள் சொல்வது ஒன்றாக இருக்கும், செய்வது வேறொன்றாக இருக்கும். அப்படித்தான் இப்போது சொல்லியிருக்கிறார் எமி ஜாக்சன். இவருடைய சமூக வலைத்தளங்கள் பக்கம் போனாலே படு கிளாமரான புகைப்படங்கள் கன்னாபின்னாவென்று இருக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் அப்படிப்பட்ட புகைப்படங்களைப் பதிவேற்றியிருப்பார். பலருக்கும் அது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
ஆனால், இப்போது வேறொரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் எமி ஜாக்சன். அவருக்கு புடவை அணிவது மிகவும் பிடிக்குமாம். “பெண்கள் அணியும் ஆடைகளிலேயே மிகவும் அழகாக இருப்பது புடவைதான், சில சமயங்களில் லெஹன்கா-வும் அழகு. சரியான இடங்களில் உங்களது வளைவுகளை எடுத்துக் காட்டும், அதே சமயம் அடக்கமாகவும் இருக்கும். என் மனதில் இந்தியாவிற்கு எப்போதுமே முக்கியமான இடம் உண்டு,” எனச் சொல்லியிருக்கிறார்.
ஒரு அழகான லெஹன்காவில் அவர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துவிட்டு இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார். நாளையே ஒரு பிகினி புகைப்படத்தை அவர் பகிர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.