ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளர் ரக்ஷ்ன். விஜய் டிவியில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். விஜய் டிவியின், அது இது எது நிகழ்ச்சிக்கு பங்கேற்பாளராக வந்த ரக்ஷ்ன் சிரிச்சா போச்சு பகுதியில் பல காமெடி போர்ஷன்களில் நடித்தார். தற்போது கலக்கப்போவது யாரு சீசனில் தொகுப்பாளராக உள்ளார்.
சின்னத்திரை பணிகளுக்கு நடுவே சினிமா வாய்ப்பும் தேடிக் கொண்டிருந்தார். அது இப்போது கிடைத்திருக்கிறது. துல்கர் சல்மான் நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் அவரது நண்பராகவும், காமெடியனாகவும் நடித்திருக்கிறார். இதுபற்றி ரக்ஷன் கூறியதாவது:
நடிப்பில் சாதிக்க வேண்டும் என்பது என்றுமே எனது கனவாகும். ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த வேலையில் தான் எனக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற ஒரு மிகச்சிறப்பான கதையிலும் கதாபாத்திரத்திலும் நான் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான கதாபாத்திரமாகும்.
மிக பெரிய நட்சத்திரமாகவும் ஒரு ஸ்டாரின் மகனாகவும் இருந்தாலும் துளிகூட பந்தாவே இல்லாமல் மிக எளிமையாக பழக்கூடியவர் துல்கர் சல்மான். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என நம்புகிறேன் என்கிறார்.