ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பவர் ஸ்ரீதேவி. அவர் தமிழ் சினிமாவில் பல காலம் நடிக்காமல் போயிருந்தாலும் அவரை தமிழ் ரசிகர்கள் மறக்கவில்லை. தமிழில் பல நல்ல படங்களில், கதாபாத்திரங்களில் ஸ்ரீதேவி நடித்ததே அதற்குக் காரணம்.
ஆரம்ப காலங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் நெருக்கமான நட்பில் இருந்தவர் ஸ்ரீதேவி. அவர் மறைந்ததுமே ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது இரங்கல் செய்தியில் அந்த ஆழ்ந்த நட்பைப் புரிந்து கொள்ளலாம்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காக ஸ்ரீதேவி விரதம் இருந்ததை ரஜினி ரசிகர்கள் இப்போது நினைவு கூறுகிறார்கள்.
தீவிர சாய் பாபா பக்தரான ஸ்ரீதேவி, ரஜினிக்காக ஒரு வாரம் விரதம் இருந்திருக்கிறார். அவர் உடல் நலம் தேறியதும், புனேவில் உள்ள சாய் பாபா கோயிலுக்குச் சென்று அவரது விரதத்தை நிறைவு செய்துள்ளார். அந்த நிகழ்வை ரஜினி ரசிகர்கள் நினைவு கூர்ந்து ஸ்ரீதேவியைப் பற்றி நெகிழ்வுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
மறைந்த ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் நேற்றே மும்பை சென்றார்கள்.