சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

காலா படத்தில் மும்பையில் இருக்கும், தாதாவாக நடிக்கிறார் ரஜினி. நவநிர்மாண் சேனா போன்ற கட்சியின் தலைவராக நானா படேகர் நடிக்கிறார். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ள காலா படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் தொடங்கிவிட்டது.
தனது டப்பிங்கை இந்த மாத இறுதிக்குள் ரஜினி முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலா படத்தின் தணிக்கை சான்றிதழை மார்ச் இறுதிக்குள் பெற்று ஏப்ரல் 27 வெளியீட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தனை சீக்கிரம் தணிக்கை சான்றிதழ் பெற திட்டமிட்டவர்கள் காலா படத்தை ஏப்ரல் 13 அல்லது 14 அன்று வெளியிடாமல் ஏப்ரல் 27 அன்று வெளியிட திட்டமிட்டது ஏன்?
மே 1-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று உழைப்பாளர் தினம், அன்று விடுமுறைதினம் வருவதால், 27, 28, 29, 30, 1 என ஐந்து நாட்கள் வசூல் பார்க்கலாம் என்பதை கருத்தில் கொண்டு ஏப்ரல் 27 ஆம் தேதியை தேர்வு செய்துள்ளனர்.




