அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' |
சின்னப் பூவே மெல்ல பேசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ராம்கி. ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருப்பவர், தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இவர் தன் மனைவியும், நடிகையுமான நிரோஷாவுடன் சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே உள்ள கதீட்ரல் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இவர், கடந்த 13 ஆண்டுகளாக சொத்து வரியை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. தற்போது வரை அவர் சென்னை மாநகராட்சிக்கு ரூ.1.17 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளார். இதனால், அவர் வீட்டில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். ஒருவாரத்தில் வரியை கட்டாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.