சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
அக்ஷ்ய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே நடித்துள்ள ஹிந்திப் படமான பேட் மேன் கடந்த வாரம் வெளியாகி மிகுந்த வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. சீனிகாம், பா, ஷமிதாப், உள்ளிட்ட படங்களை இயக்கிய பால்கி இயக்கி உள்ளார்.
இந்தப் படம் தமிழ் நாட்டைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் வாழ்க்கையை மையமாக கொண்டது. பெண்களுக்கு அடிப்படை தேவையான நாப்கினை குறைந்த விலையில் தயாரித்து கொடுத்தவர் இவர். பேட் மேன் படம் நல்ல வரவேற்புடன் வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பேட் மேன் படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பி அதன் உரிமத்தை பெற கடும் போட்டி நிலவுகிறது. இயக்குனர் பால்கி ஏற்கனவே தனுஷை வைத்து ஷமிதாப் இந்திப் படத்தை இயக்கியவர். எனவே அவரே தனுஷ் நடிப்பில், தமிழிலும் தயாரிக்க உள்ளதாகவும், அவருக்கு பதில் வேறொருவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஏ.எல்.விஜய், அல்லது மோகன்ராஜா இயக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் படத்தின் ரீமேக் பற்றி கருத்து தெரிவித்துள்ள அருணாசலம் முருகானந்தம் பேட்மேன் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் அதற்கு தனுஷ்தான் பொருத்தமான நடிகர் என்று தெரிவித்திருக்கிறார்.