ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

கெளதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் துருவநட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்கெட்ச் படத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு கெளதம்மேனன் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்காமல் மாதக்கணக்கில் தாமதம் செய்ததால், அதையடுத்து ஸ்கெட்ச் படத்தில் நடிக்கத் தொடங்கிய விக்ரம் அந்த படத்தை மின்னல் வேகத்தில் முடித்தார். அந்த படமும் திரைக்கு வந்து விட்டது.
ஸ்கெட்ச் படத்தை முடித்த பிறகும் துருவநட்சத்திரம் படப்பிடிப்பு தொடங்கப்படாததால் அதையடுத்து சாமி ஸ்கொயர் படத்திற்கு கால்சீட் கொடுத்து நடித்து வருகிறார் விக்ரம். அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில், நேற்று முதல் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளார் கெளதம்மேனன்.
அதனால் சாமி ஸ்கொயர் படப்பிடிப்பில் நடித்து வந்த விக்ரம், தற்போது துருவநட்சத்திரம் படத்திற்கு வந்துள்ளார். மே 19-ந்தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதால் மீதமுள்ள அனைத்து காட்சிகளையும் நடித்து கொடுத்த பிறகே மீண்டும் சாமி-2 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் விக்ரம்.




