ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்ராம் நகரில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த பேரன்பு படத்திற்கு 20வது இடம் கிடைத்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:
ரோட்டர்டாமில் நடந்து வரும் 47வது சர்வதே திரைப்பட விழாவில் ராம் இயக்கிய பேரன்பு உள்பட பல இந்திய படங்கள் கலந்து கொண்டன. ஒரு இயக்குனரின் முதல் இரண்டு படங்கள் மட்டுமே இந்த விழாவில் போட்டிபிரிவுக்கு எடுத்துக் கொள்ளப்படும். ராமின் முந்தைய படங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டிருப்பதால் பேரன்பு படம் பார்வையாளர்கள் விருதுக்கு போட்டியிட்டது. இந்த போட்டியில் 187 உலக திரைப்படங்கள் கலந்து கொண்டன. இந்த படங்களிலிருந்து பேரன்புக்கு 20வது இடம் கிடைத்துள்ளது. இதனால் சிறந்த ஆசிய படத்துக்கு வழங்கப்படும் விருதுக்கான போட்டியில் கலந்து கொள்ள பேரன்பு தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
"வாய்ப்பளித்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கும், வாக்களித்த திரைப்பட விழாவின் பார்வையாளர்களுக்கும் எங்களது நன்றிகள். தமிழ்நாடு மற்றும் கேரள ஊடகத்துறை நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்களது நன்றிகள்" என்கிறார் ராம்.