விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
தென்னிந்திய திரையுலகில் மட்டுமல்லாது இந்திய திரையுலகிலும் கடந்த சில வருடங்களாக 'பாகுபலி' படத்தின் மூலம் அதிகம் கவனிக்கப்பட்ட ஹீரோயினாக விளங்கியவர் அனுஷ்கா. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் அவருடைய தோற்றமும், அழகும், நடிப்பும் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. அந்தப் படங்கள் அவருடைய இமேஜை இன்னும் அதிகமாக உயர்த்தின.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்கா பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் கடந்த நான்கு வருடங்களாக அவருக்காகவே காத்திருந்து 'பாகமதி' படத்தை எடுத்து முடித்து கடந்த வாரம் வெளியிட்டார்கள். தெலுங்கில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வெற்றிக்காக அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார்.
“பாகமதி' படத்தைப் பாராட்டியதற்காக ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய திரையுலக வாழ்க்கையில் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு படமாக இந்தப் படத்தை உருவாக்கி, எனக்காகவே நான்கு வருடங்கள் காத்திருந்த இயக்குனர் அசோக், மற்றும் யுவி குழுவினர் ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள். நீங்கள் நிச்சயம் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே, நாங்கள் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் கடினமாகவே உழைக்கிறோம். என்னுடைய வாழ்க்கையில் நிபந்தனையற்ற அன்பு செலுத்தி வரும் என்னுடைய ரசிகர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி,” என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களே தோல்வியைத் தழுவி வரும் நிலையில் ஹீரோயின் அனுஷ்காவின் படம் வெற்றி பெற்றுள்ளது திரையுலகினருக்கும் மற்ற ஹீரோக்களின் ரசிகர்களுக்கும் ஆச்சரியமாக உள்ளது. இத்தனைக்கும் 'பாகமதி' வழக்கமான பேய்ப் படமாகத்தானே இருக்கிறது என அவர்கள் கமெண்ட் செய்கிறார்களாம்.