பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

2010ம் ஆண்டில் கிரிஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், அனுஷ்கா, மஞ்சு மனோஜ் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'வேதம்'. இந்த படம் தமிழில் சிம்பு, அனுஷ்கா, பரத் ஆகியோர் நடிக்க ‛வானம்' எனும் பெயரில் ரீமேக் ஆனது. தெலுங்கில் ஹிட் அடித்த படம் தமிழில் சுமாரான வரவேற்பையே பெற்றது. இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றதுள்ளது.
இதுபற்றி கிரிஷ் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, "வேதம் படத்தின் புரோமோசனுக்காக அனுஷ்காவின் கிளாமர் ஆன போஸ்டர் ஒன்றை சிட்டியின் முக்கிய பகுதியில் விளம்பரமாக பயன்படுத்தினோம். அதனால் சுமார் 40 விபத்துகள் ஏற்பட்டது என வழக்கு பதிவானது. இதனால் அந்த விளம்பர போஸ்டரை அகற்றினோம்" என இவ்வாறு கூறினார்.