ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
'புஷ்பா 2' வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், 'ஜவான்' வெற்றிக்குப் பிறகு இயக்குனர் அட்லி இருவரும் இணையும் புதிய படம் பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது. அல்லு அர்ஜுனின் 22வது படமாகவும், அட்லியின் 6வது படமாகவும் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளார். அதற்கான அறிவிப்பை வீடியோ ஒன்றுடன் வெளியிட்டுள்ளார்கள்.
இந்தப் படத்தில் மூன்று ஹீரோயின்கள், ஆறு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக ஏற்கெனவே அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது தீபிகா பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். தீபிகாவை சந்தித்து அட்லி கதை சொன்ன போது எடுத்த வீடியோ, அதன்பின் டெஸ்ட் ஷுட்டிற்காக எடுத்த வீடியோ இரண்டும் அந்த அறிவிப்பு வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
ஒரு ஆக்ஷன் கதாபாத்திரத்தில் தீபிகா நடிக்கப் போகிறார் என்பது அந்த வீடியோவைப் பார்த்ததும் புரிந்து கொள்ள முடிகிறது.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்திலிருந்து தீபிகா விலகினார் என்ற செய்தியும், சமீபத்தில் 'கல்கி 2898' படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து தீபிகா விலகலாம் என்ற செய்தியும் வெளியாகின.
அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அல்லு அர்ஜுன், அட்லி கூட்டணியில் தீபிகா நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.