ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று அறிவிக்கும் நடிகைகள் மத்தியில் சமந்தா சமர்த்து. சுமார் 10 நாட்கள் மட்டும் புதுமண வாழ்க்கையை அனுபவித்துவிட்டு மீண்டும் நடிக்க வந்துவிட்டார். கைவசம் அரை டஜன் படங்கள் வைத்திருக்கிறார் சமந்தா.
இந்த வருடம் அவரின் நடிப்பில் நான்கு படங்களாவது வெளிவர வாய்ப்பிருக்கிறது. விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ள 'இரும்புத்திரை' படம் மார்ச் 28ல் வெளியாகிறது. தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' என்ற படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான 'மகாநதி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்கள் இல்லாமல், 'யு டர்ன்' கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார் சமந்தா.
சமந்தா நடிப்பில் தமிழில் ரீமேக் ஆகும் என நீண்டநாட்களாக சொல்லப்பட்டுக் கொண்டிருந்த இந்தப் படம் பற்றிய அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் என்ற பேனர் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் துவங்குகிறது.