கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
பாண்டிராஜ் இயக்கிய கதகளி, இது நம்ம ஆளு, பசங்க 2 ஆகிய படங்கள் கமர்ஷியலாக வெற்றியடைவில்லை. எனவே அடுத்தப்படம் இயக்குவதில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. சின்ன இடைவெளிக்குப் பிறகு தற்போது கார்த்தி நடித்து படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ்.
இந்த படத்தில் கார்த்தியுடன் சாயிஷா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், சூரி, ப்ரியா பவானி சங்கர், மௌனிகா, ஸ்ரீமன், பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு 'கடைக்குட்டி சிங்கம்' என்று சில தினங்களுக்கு முன் பெயரிடப்பட்டுள்ளது.
இதன் பஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டார். 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் இந்த படத்தை சூர்யாவின் '2D என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிக்கிறது.
கார்த்தியை வைத்து சூர்யா தயாரிக்கும் முதல் படம் இது. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். கார்த்தி நடிக்கும் படத்திற்கு டி.இமான் இசை அமைப்பது இதுவே முதல் முறை!
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. எனினும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் கதைக்களம் புதுக்கோட்டை மாவட்டம் என்றும், படத்தில் நெடுவாசல் கிராமத்தில் நடைபெற்ற ஹைட்ரோ கார்பன் பிரச்சனைகள் எல்லாம் இடம்பெறுகிறது என்றும் தகவல் அடிபடுகிறது.