சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
தமிழில் டான்சராக இருந்து நடிகராக அறிமுகமான ராகவா லாரன்சுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. 15 வருடங்களுக்கு முன்பு ஸ்டைல் என்ற படத்தை தெலுங்கில் இயக்கி நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டானதும். அந்த படத்தின் இரண்டாகம் பாகத்தையும் இயக்கி நடித்தார். அதுவும் வெற்றி பெற்றது. அதன் பிறகு டான் படத்தை இயக்கி நடித்தார். தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவருக்கு முனி வரிசை படங்கள் கைகொடுக்க இங்கும் வெற்றி பெற்றார்.
இப்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். ஜாக்குவார், மித்ருடு வெற்றிப் படங்களை இயக்கிய மகாதேவ் இயக்குகிறார். படத்திற்கான கதையை பாகுபலி படத்தின் கதையை எழுதியவரும், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.
தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளிலும் கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கிறது. தமிழ் வசனம் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதுகிறார். பாகுபலி படத்திற்கும் மதன் கார்க்கியே வசனம் மற்றும் பாடலகளை எழுதியது குறிப்பிடத்தக்கது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.