ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மோகன்ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வேலைக்காரன். டிசம்பர் 22-ந்தேதி திரைக்கு வந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, பிரகாஷ்ராஜ், பகத்பாசில் என பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரான இந்த படத்தில் நயன்தாரா, பகத்பாசில் போன்ற பிரபல மலையாள நட்சத்திரங்களும் நடித்திருப்பதால் கேரளாவில் அதிகப்படியான தியேட்டர்களில் வேலைக்காரன் வெளியிடப்பட்டது.
அந்த வகையில், இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடப்பட்ட நான்கு நாட்களில் ரூ. 28 கோடி வசூலித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து இதற்கு முன்பு வெளியான படங்களை விட இது அதிக வசூலாகும். மேலும், இந்த படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்தபோதும் தமிழகத்தில் திரையிடப்பட்ட அனைத்து ஏரியாக்களிலும் வேலைக்காரன் நல்ல வசூலை ஈட்டிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.