ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமீபகாலமாக தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் போன்ற பைரஸி இணைய தளங்கள், தமிழ்ப்படங்கள் வெளியாகும் அன்றே புதுப்படங்களை வெளியிட்டு படங்களின் வசூலுக்கு வேட்டு வைத்து வருகின்றனர். இந்த இணையதளங்களை முடக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பில் எடுக்கப்பட்ட எந்த முயற்சிகளும் ஒர்க்-அவுட்டாகவில்லை. அதனால் சவால் விட்டபடியே ஒவ்வொரு படத்தையும் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக, தற்போது தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் இணையதளங்களைப் பார்த்து தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கெஞ்சத் தொடங்கி விட்டார்கள். அந்த வகையில், ஜெய் - அஞ்சலி நடித்துள்ள பலூன் படத்தை இயக்கியுள்ள சினீஷ், "பாஸ் உங்களை தடுக்க முடியாதுன்னு தெரியும். தமிழ் ராக்கர்ஸ் பாஸ் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க. பலூன் படத்திற்கு ஒரு வாரம் டைம் கொடுத்தீங்கன்னா என்னோட தயாரிப்பாளர் தப்பிச்சிடுவாரு" என்று தனது டுவிட்டரில் கெஞ்சிக்கேட்டுக் கொண்டுள்ளார்.