ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
2017ம் ஆண்டில் இன்னும் இரண்டு வெள்ளிக் கிழமைகள் தான் உள்ளன. இந்த வார வெள்ளிக்கிழமையில், “இமை, சமூக வலைதளம், சக்கப் போடு போடு ராஜா, வேலைக்காரன்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அடுத்த வாரம், “பலூன், களவாடிய பொழுதுகள், சங்கு சக்கரம்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அன்று மேலும் சில படங்கள் வெளியாகலாம்.
2018ம் ஆண்டின் துவக்க வாரத்தில் பொதுவாக அதிகப்படங்கள் வெளிவர வாய்ப்பில்லை. பொங்கல் தினத்தை முன்னிட்டுதான் படங்கள் வெளிவரும். 2018 பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக சில படங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்', விக்ரம் நடிக்கும் 'ஸ்கெட்ச்', பிரபுதேவா நடிக்கும் 'குலேபகாவலி', அனுஷ்கா நடிக்கும் 'பாக்மதி' ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக வர உள்ளன. அந்தப் போட்டியில் தற்போது அரவிந்த்சாமி நடித்துள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படமும் இணைந்துள்ளது.
ஜனவரி 25ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட '2.0' பட வெளியீடு ஏப்ரல் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், பொங்கல் வெளியீட்டிற்கு தற்போது வரை 4 படங்கள் தயாராகியுள்ளன. அந்தப் பட்டியலில் மேலும் ஓரிரு படங்கள் சேரவும் வாய்ப்புள்ளது.