மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! |
இணையதளங்களில் பில்லா-2 பட ஸ்டில்கள் வெளியாகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பில்லா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக பில்லா-2 படம் உருவாகி வருகிறது. அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்க, உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்டி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தில் நடிகர், நடிகைகளின் கெட்டப்புகள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.
இப்படத்தின் ஸ்டில்கள் பத்திரிக்கையாளர்களுக்கு இதுவரை அளிக்கப்படாத நிலையில், பில்லா-2 படத்தின் ஸ்டில்களை யாரோ இணையதளங்களில் உலவ விட்டுள்ளனர். மேலும் இணையதளங்களில் வெளியாகி இருக்கும் படங்கள் அஜித் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்யும் அளவிற்கு வெளியாகி இருக்கிறது. அப்படி என்ன ஸ்டில் என்று கேட்கிறீர்களா..? ஆணுக்கு பெண் வேடம் போட்டு படுக்கையில் கிடத்தி வைத்திருப்பது போல ஒரு காட்சி. படுகவர்ச்சியான ஒரு பெண்ணுடன் அஜித் நடனம் ஆடுவது போன்ற காட்சி என்று ஸ்டில்கள் வெளியாகி உள்ளன.
இது படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இணையதளங்களில் இப்படி திருட்டுதனமாக ஸ்டில்களை உலவ விட்டது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.