ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
இப்படை வெல்லும் படத்தை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் நிமிர் என்ற படம் உருவாகி வருகிறது. பிரியதர்ஷன் இயக்குகிறார். இப்படம் அடுத்தமாதம் ரிலீஸாகிறது. இதைத்தொடர்ந்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். உதயநிதியே தயாரிக்கிறார். ஹீரோயின் தேர்வு உள்ளிட்ட மற்ற தேர்வுகள் நடக்கிறது. அடுத்தமாதம் 19ம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்குகின்றனர்.
இதுகுறித்து உதயநிதி கூறியதாவது... சீனுராமசாமி இயக்கி, தேசிய விருது பெற்ற "நீர் பறவை" படத்தை தயாரித்தவன் என்ற முறையில் அவருடன் இணைந்து பணியாற்றுவது எங்கள் நிறுவனத்துக்கு சந்தோஷம். இப்போது அவரது இயக்கத்தில், தயாரித்து, நடிப்பதில் எனக்கு பொறுப்பும், விருப்பும் அதிகம். ஜனவரி மாதம் 19ஆம் தேதி படப்பிடிப்பு துவங்க உள்ளது என்றார்.