ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'ஜெயம்' படத்தில் அறிமுகமானவர் சதா. சினிமாவும், இளம் பெண்களும் மறந்தே போன பாவாடை தாவணியில் வந்து குடும்பப் பாங்கான அழகுடன், அழகான கண்களுடன், அசத்தலான அழகுடன் அடுத்த சாவித்ரி, ரேவதி, சினேகா என அப்படம் வெளிவந்த போது பேச வைத்தார்.
ஷங்கர் இயக்கிய 'அந்நியன்' படத்திலும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு, அஜித்துடன் 'திருப்பதி'பைப் பெற்று நம்பர் 1 நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தமிழ்த் திரையுலகத்தில் இருந்து காணாமல் போனார். 'எலி' படத்தில் வடிவேலுவுடன் நடித்து அதிர்ச்சியடைய வைத்தார்.
இப்போது 'டார்ச் லைட்' என்ற படத்தில் ரீ-என்ட்ரி ஆகி மீண்டும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். இன்று வெளியான இப்படத்தின் முதல் பார்வைதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம். படு கிளாமராக முதுகுப்புறத்தைக் காட்டிக் கொண்டு அவர் போஸ் கொடுத்திருப்பது அந்த குடும்பப் பாங்கான சதா-வா இவர் என வியக்க வைத்திருக்கிறார். படத்தில் சதா, விலை மாது கதாபாத்திரத்தில் நடிப்பதுதான் அந்த கவர்ச்சிக்குக் காரணமாம்.
இப்படத்தை விஜய் நடித்த 'தமிழன்' படத்தை இயக்கிய மஜீத் இயக்குகிறார்.