'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மதுரை:கந்துவட்டி பிரச்னை அனைவரையும் பாதித்துள்ளது என நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கூறினார்.
கடன் பிரச்னையால் தயாரிப்பளர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் கந்து வட்டி கேட்டு அன்பு செழியன் என்பவர் மிரட்டியதால் இந்த முடிவு எடுத்ததாக கூறினார். அசோக்குமார் உடல் இன்று மதுரை வந்தது. உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் மதுரை வந்த தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கந்துவட்டி பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் மரணம் தான் கடைசி மரணமாக இருக்க வேண்டும். இது புரட்சிக்கான மரணமாகவே கருதுகிறேன். கந்து வட்டி பிரச்னையால் நான், கவுதம் மேனன், பார்த்திபன் என எல்லோரும் சிக்கியுள்ளோம். அன்புசெழியன் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்பு செழியனுக்கு ஆதரவாக அமைச்சர் , எம்.எல்.ஏ. யார் வந்தாலும் விடமாட்டோம். இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்க கூடாது.நடக்கவும் விட மாட்டோம். இவ்வாறு விஷால் கூறினார்