ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நிகிஷா பட்டேல் யார் என்று சொன்னால் நம் ரசிகர்களுக்கு ஞாபகம் இருக்குமா என்று தெரியாது. நல்ல அழகும் கிளாமரும் கொண்ட ஒரு நடிகை தான் நிகிஷா பட்டேல். அடிக்கடி அவரது கிளாமரான புகைப்படங்களை மீடியாக்களுக்கு அனுப்பிக் கொண்டேயிருக்கும் ஒரே நடிகை. அதோடு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி அவருடைய கிளாமரான, பிகினி உடை புகைப்படங்களையும் பதிவிடுபவர். இருந்தாலும் இன்னமும் திரையுலகில் முக்கிய இடத்தைப் பிடிக்காமலே இருப்பவர்.
தெலுங்கில் பவன்கல்யாண் ஜோடியாக 'புலி' படத்தில் 2010ம் ஆண்டு அறிமுகமானவர். தமிழில் “தலைவன், என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், 7 நாட்கள்” ஆகிய தோல்விப் படங்களில் நடித்தவர். அவர் கைவசம் எந்தப் புதுப்படமும் இல்லை. அதனால், சமூக வலைத்தளங்களில் அவருடைய புதுப் புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் 'பிகினி' உடையில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து விட்டு “உங்கள் வாழ்க்கையில் வளைவுகள் வரலாம், அவற்றைத் தழுவிக் கொள்ளுங்கள், அதற்காக வெட்கப்படாதீர்கள்” ஒரு பொன்மொழியையும் சொல்லியிருக்கிறார். அதோடு தனக்கு 'பிகினி' உடை பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.