ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் அறிமுகமானவர் சந்திரன். அதன்பிறகு ரூபாய், கிரகணம் ஆகிய படங்களில் நடித்தவர், இப்போது திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில்பார்த்திபன், சாத்னா டைட்டஸ், சாம்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். சுதர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அஷ்வத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது.
அப்போது இயக்குர் சுதர் பேசுகையில், இந்த படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியிருக்கிறது. ஒரு உலக கோப்பை கிரிக்கெட் கப்பை திருடும் கதை. சீன் பை சீன் காமெடியாக இருக்கும். இந்த படத்தை கயல் சந்திரனின் அண்ணன் ரகுநாதன் தயாரித்துள்ளார்.
பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிச்சைக்காரன் படத்தில் நடித்த சாத்னா டைட்டஸ் நாயகியாக நடித்திருக்கிறார். ஒரு பாடலை இயக்குனர் வெங்கட்பிரபுவும், அவரது தம்பியான பிரேம்ஜியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அந்த பாடல் சூப்பர் ஹிட்டாகும்.
கதைப்படி ஒரு சண்டை காட்சியை ஒரு ரெஸ்ட் ரூமில் படமாக்கினோம். அப்போது ஒருவர் கயல் சந்திரனை தனது ஷூ காலால் எட்டி உதைப்பது போன்ற ஷாட்டை படமாக்கியபோது டூப் பயன்படுத்தலாம் என்று சொன்னேன். ஆனால் சந்திரன் அதற்கு மறுத்து விட்டு தானே நடித்தார். அப்போது நிஜமாலுமே ஒருவர் சந்திரனை தாக்கியபோது அவரது முகத்தில் ரத்தம் வழிந்தது. அந்த காயத்துடனேயே அந்த காட்சியில் நடித்தார் என்றார்.