ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் புத்தகம், என்னமோ ஏதோ, தடையறத்தாக்க படங்களில் நடித்து விட்டு தெலுங்கிற்கு சென்ற ரகுல் பிரீத் சிங்கிற்கு தொடர்ச்சியாக அங்கு ஹிட் படங்களாக அமைந்தன. ஆனால் இந்த 2017-ம் ஆண்டு அவர் நாயகியாக நடித்து வின்னர், ராரண்டாய் வேடுக சுதம், ஜெய ஜானகி நாயகா, ஸ்பைடர் என நான்கு படங்கள் வெளியாகின.
அப்படி வெளியான நான்கு படங்களில் ராரண்டாய் வேடுக சுதம் மட்டுமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மற்ற மூன்று படங்களுமே தோல்விப்படங்களாகி விட்டன. அதனால் அடுத்தபடியாக புதிய தெலுங்கு படங்கள் ரகுல் பிரீத் சிங்கிற்கு கமிட்டாகவில்லை.
அதனால் தெலுங்கு சினிமாவிற்கு சற்று இடைவெளி விட்டுள்ளார் அவர், அடுத்தபடியாக தமிழில் விஜய்யின் 62 வது படம், சூர்யா-செல்வராகவன் இணையும் படங்களில் நடிக்கயிருப்பவர், இந்தியில் அய்யாரி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.