ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' படத்தில் அறிமுகமாகி 'அப்பாணி ரவி' கேரக்டரில் கவனிக்க வைத்தவர் சரத்குமார். அதை தொடர்ந்து மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல்' பாடல் அதிரிபுதிரி ஹிட்டாக அதில் நடித்த இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிகின்றன.
இதை தொடர்ந்து தமிழில் லிங்குசாமியின் டைரக்சனில் விஷால் நடிக்கும் 'சண்டக்கோழி-2' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சரத்குமார். இப்போது ராஜூ முருகன் கதையில் புதியவர் சரவணன் ராமச்சந்திரன் இயக்கும் படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் 'அப்பானி' சரத்குமார்.