ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற மகேஷிண்ட பிரதிகாரம் படத்தை நிமிர் என்ற பெயரில் தமிழீல் ரீமேக் செய்கிறார் பிரியதர்ஷன். பகத் பாசில் நடித்த கேரக்டரில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். அபர்ணா பாலமுரளி நடித்த கேரக்டரில நமீதா புரமோத் நடிக்கிறார், அனுஸ்ரீ நடித்த கேரக்டரில் பார்வதி நாயர் நடிக்கிறார். உதயநிதியின் தந்தையாக மகேந்திரன் நடிக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார், தர்புகா சிவா இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் பிரிதர்ஷன் கூறியதாவது:
போட்டோகிராபராக இருக்கும் ஒரு கிராமிய இளைஞனின் வாழ்க்கையும் பழிவாங்கும் படலமும் தான் நிமிர். இது சராசரி த்ரில்லர் படம் கிடையாது. ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படம். உதயநிதி ஸ்டாலினின் கதாபாத்திரத்தின் பெயர் மகேஷ். தன் சுய பலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழிவாங்கும் கதாபாத்திரம் அவருடையது. தென்காசியில் நடக்கும் இக்கதையில், ஒரு சராசரி கிராமத்து இளைஞனின் வாழ்க்கையை எல்லோரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்படி படமாக்கப்பட்டுள்ளது.
இது எனக்கு ஒரு ஸ்பெஷல் படமாகும். இவ்வளவு ஆண்டு காலம் திரை துறையில் இருந்தாலும் இயக்குனர் மகேந்திரனுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை. அவர் என் மானசீக குரு. முதலில் அவருக்கு உதவி இயக்குனராக இருக்க ஆசைப்பட்டேன். அது நடக்காமல் போனது. பிறகு பலகாலம் கழித்து இந்த படத்தில் தான் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. உதயநிதியின் கதாபாத்திரத்தின் வளர்ச்சிக்கு மகேந்திரன் அவர்களின் கதாபாத்திரம் மிக முக்கியமானதாகும். மகேந்திரன் எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமாக கருதுகிறோம். அவருக்கு இந்த படத்தின் கதையை கூறியபொழுது அவர் பரிந்துரைத்த தலைப்பு தான் நிமிர். இதை விட பொருத்தமான தலைப்பு இக்கதைக்கு கிடைக்காது என்றார் பிரியதர்ஷன்.