ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மீம்ஸ் உருவாக்குபவர்களுக்கு அவ்வப்போது ஏதாவது பரபரப்பாக நடந்து கொண்டேயிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கக் கூடிய விதத்தில் மீம்ஸ்களை வெளியிட்டுக் கொண்டேயிருப்பார்கள். அரசியல், விளையாட்டு, சினிமா என எதையும் விட்டு வைக்காதவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள். அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வேலை. நிமிடத்திற்கு நிமிடம் அரசியல்வாதிகள் யாராவது 'மெர்சல்' படத்தைப் பற்றிப் பேசி அவர்களை மீம்ஸ் உருவாக்க வைத்துவிடுகிறார்கள்.
'பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி' ஆகிய வசனங்கள் 'மெர்சல்' படத்தில் இடம் பெற்றதால் பாஜக தலைவர்கள் அந்த வசனங்களை நீக்க வேண்டும் என எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து இந்திய மீடியாக்கள் அனைத்திலுமே 'மெர்சல்' சர்ச்சை முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது.
நேற்று (அக்.,21) காங்., துணை தலைவர் ராகுல் 'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர், இலங்கைத் தமிழர் பிரச்சனையுடன் ஒப்பிட்டு ராகுலை கேள்வி கேட்டுள்ளார். 'மெர்சல்' பட விவகாரம் இப்போது அந்தப் பிரச்சனையிலிருந்து விலகி திசை மாற ஆரம்பித்துள்ளது. இன்னும் இது எங்கெல்லாம் பயணிக்குமோ என பலரும் வியப்புடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.