ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அட்லி இயக்கத்தில் 'தெறி' படத்தில் வில்லனாக நடித்தார் மகேந்திரன். தெறி படத்தை அடுத்து இப்போது பிரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் 'நிமிர்' படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது திரு இயக்கத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' என்ற படத்திலும் நடிக்கிறார் மகேந்திரன்.
'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தில் மகேந்திரன் தவிர இன்னொரு பிரபல இயக்குநரும் நடிக்கிறார். அவர் இயக்குநர் அகத்தியன். இப்படத்தின் இயக்குநரான திரு உதவியாளராகப் பணியாற்றியது அகத்தியனிடம் தான். அப்போது அகத்தியனின் மகளுடன் காதல் ஏற்பட்டு, பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய மாமனாரான அகத்தியனை தற்போது நடிகராக்கியுள்ளார் திரு.,
அகத்தியன் ஏற்கெனவே 'அகரம்' என்ற படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். மிஸ்டர். சந்திரமௌலி படத்தில் மகேந்திரன், அகத்தியன் இருவரும் நடிப்பதன் மூலம் இந்த படத்தில் தேசிய விருது பெற்ற இரண்டு இயக்குநர்கள் நடிக்கும் படம் என்ற பெருமையும் இந்தப் படத்துக்குக் கிடைத்திருக்கிறது.