ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா லீடு ரோலில் நடித்துள்ள படம் அறம். இந்த படத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்துள்ள நயன்தாரா, குடிதண்ணீர் வசதி இல்லாத ஒரு கிராமத்துக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கும் ஒரு வேடத்தில் நடித்துள்ளார். ஒரே நாளில் நடக்கும் கதை என்பதால், ஒரேமாதிரியான காஸ்டியூம் அணிந்துதான் படம் முழுக்க நடித்திருக்கிறார் நயன்தாரா.
மேலும், தனது கேரியரில் இந்த அறம் படத்தை முக்கியமான படமாக கருதும் நயன்தாரா, சமீபகாலமாக எந்த படங்களின் பிரமோஷன்களிலும் கலந்து கொள்ளாதவர் இந்த படத்திற்காக அந்த கொள்கையை தளர்த்தி பிரமோஷன்களில் பங்கேற்று வருகிறார். தீபாவளிக்கு விஜய்யின் மெர்சல் படத்துடன் அறம் மோதுவதாக கூறப்பட்டு வந்த நிலையில, இப்போது நவம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிப்போயிருக்கிறது. அதோடு. இதே நாளில் அறம் படம் தெலுங்கிலும் கார்த்தவ்யம் என்ற பெயரில் ரிலீசாகிறது.