ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு நடித்துள்ள படம் மெர்சல். தெறி படத்திற்கு பிறகு அட்லி மீண்டும் விஜய்யை இயக்கி உள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். சுமார் ரூ.100 கோடி செலவில் ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் சார்பில் முரளி ராமசாமி தயாரித்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்திற்கு இது 100வது படமாகும்.
தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் தீபாவளிக்கு வேறு எந்த பெரிய படமும் ரிலீசாகவில்லை. நேற்று முன்தினம் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். அதாவது படத்தை குழந்தைகள் தங்களது பெற்றோரின் அனுமதியுடனோ, அல்லது அவர்களுடனோ அமர்ந்து தான் பார்க்க முடியும்.
விஜய்க்கு குழந்தை ரசிகர்கள் அதிகம் இதனால் படத்திற்கு யு/ஏ கிடைத்திருப்பது படக்குழுவினருக்கு சிறிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொலைக்காட்சி உரிமத்துக்கு சிறிய மாறுதல்கள் செய்து யு சான்றிதழ் பெற வேண்டும் என்கிற நிலையும் உருவாகி உள்ளது.