ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டில் வெளியான சைத்தான் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் பிஜாய் நம்பியார். மணிரத்தினத்தின் உதவியாளராக இருந்து இயக்குனர் ஆனவர். அதன்பிறகு டேவிட் என்ற படத்தை ஹிந்தி, தமிழ் மொழியில் தயாரித்து, இயக்கினார். சில படங்களை தயாரித்தும் உள்ளார்.
பிஜாய் நம்பியார் தற்போது இயக்கி வரும் படம் சோலோ. தமிழ், மலையாளத்தில் தயாராகியுள்ள இந்தப் படத்தில் துல்கர் சல்மான், நேகா சர்மா, சாய் தன்ஷிகா, ஸ்ருதி ஹரிகரன், ஆர்த்தி வெங்கடேஷ், நாசர், சுஹாசினி உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 5ம் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் பிஜாய் நம்பியார் நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர், சோலோ படத்தின் பாடல்கள், டிரைலர்களை அவருக்கு போட்டுக் காட்டினார். அவற்றை பார்த்த ரஜினி நன்றாக வந்திருப்பதாகவும், படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியதோடு படம் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்தார். படத்தை பார்க்க வருமாறு ரஜினிக்கு பிஜாய் நம்பியார் அழைப்பு விடுத்தார். பிஜாய் நம்பியாருடன் படத்தின் தயாரிப்பாளர் அனில் ஜெயினும் உடன் சென்றிருந்தார்.