ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் புரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. அதையடுத்து வேகமாக வளர்ந்த அவர், விஜய், அஜீத், சூர்யா என அனைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து விட்டார். ஆனால் விக்ரம் படத்தில் மட்டும் வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில்தான், தற்போது விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படத்தில் முதன்முறையாக அவருடன் இணைந்து நடித்துள்ளார் சூரி.
அதோடு, விக்ரமுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார் சூரி. இந்த நிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி-2 படத்திலும் காமெடியனாக நடிக்கிறார் சூரி. ஆக, ஸ்கெட்சில் நடித்து முடித்ததும் உடனடியாக மீண்டும் விக்ரமுடன் சாமி-2வில் இணைந்து விட்டார் சூரி. மேலும், ஹரி இயக்கத்தில் இதற்கு முன்பு சூரி நடித்த பூஜை, சிங்கம்-3 படங்களைப்போன்று இந்த படத்திலும் சூரிக்கு அதிகப்படியான காமெடி காட்சிகள் கொடுக்கப்படுகிறதாம். அதோடு, அவர் விக்ரமுடன் வரும் காமெடி போலீசாக நடிப்பார் என்றும் தெரிகிறது.