ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் - '100% Love'. இந்தப் படத்தை தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் '100% காதல்' என்ற பெயரில் ரீ-மேக் செய்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு லண்டனில் படமாகவுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை லாவண்யா திரிபாதி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். குறித்த தேதிகளில் அவர் கால்ஷீட் கொடுக்காமல் சொதப்பியதால் அவரை நீக்கிவிட்டு, சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் கதாநாயகியான ஷாலினி பாண்டேயை கமிட் பண்ணினார்கள்.
'100% காதல்' படத்தை அறிமுக இயக்குநர் எம்.எம்.சந்திரமௌலி இயக்குகிறார். 'கிரியேட்டிவ் சினிமாஸ் NY' மற்றும் 'NJ எண்டர்டெயின்மெண்ட்' ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை நாளை அதாவது, 30.09.2017 அன்று காலை 10.45 மணிக்கு இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிடுகிறார்.