ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
பிரேமம் புகழ் சாய் பல்லவி, பிடா படம் மூலம் தெலுங்கிலும் பிரபலமாகி விட்டார். அதையடுத்து தற்போது நானியுடன் எம்சிஏ மற்றும் தமிழ், தெலுங்கில் ஏ.எல்.விஜய் இயக்கும் கரு ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் கரு படத்தில் 4 வயது சிறுமிக்கு அம்மாவாக மெச்சூரிட்டியான வேடத்தில் நடிக்கிறார் சாய் பல்லவி.
இதையடுத்து பாலாஜிமோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாரி-2 படத்திலும் நாயகியாக சாய் பல்லவி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரி படத்தில் தனுசுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த நிலையில், இரண்டாம் பாகத்தில் இப்போது சாய் பல்லவி நடிக்கிறார். தற்போது மலையாளம், தெலுங்கிலும் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக சாய் பல்லவி இருப்பதால் அவருக்கு மாரி-2 படவாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் மாரி-2 படத்தின் தெலுங்கு டைட்டீல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.