ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நான் படத்தில் நடிகராக உருவெடுத்தவர் விஜய் ஆண்டனி. இசையில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றியது போன்று நடிப்பிலும் தனக்கேற்ற கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதனால் அடுத்தடுத்து சில ஹிட் படங்களை கொடுத்து கமர்சியல் வட்டத்திற்குள் வந்து விட்டார். குறிப்பாக, பிச்சைக்காரன் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அவருக்கு பெரிய வெற்றியை தேடிக்கொடுத்தது.
தற்போது அவர் நடித்துள்ள அண்ணாதுரை, காளி ஆகிய படங்கள் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இதில், அண்ணாதுரை படம் பிச்சைக்காரனைப்போலவே தெலுங்கிலும் வெளியாகிறது. அதோடு, தெலுங்கில் இந்திரசேனா என்ற பெயரில் வெளியாகும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டதால் அப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறதாம்.
அதனால் தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்துவரும் நிலையில், விரைவில் இசை வெளியீட்டை நடத்தி படத்தை வெளியிடவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், விஜய் ஆண்டனி படம் என்றாலே சீரியசாகவே இருக்கும். இந்த படத்திலும் அந்த ஸ்டைல் இருந்தபோதும் செண்டிமென்டும் சற்று அதிகமாக இடம்பெற்றிருக்கிறதாம். விஜய் ஆண்டனி படங்களில் இந்த அண்ணாதுரை கொஞ்சம் புதுசாக இருக்கும் என்கிறார்கள்.