ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வனமகன் படத்தில் நடித்த ஜெயம்ரவி அதையடுத்து சக்தி செளந்திரராஜன் இயக்கும் டிக் டிக் டிக் படத்தில் நடித்து வருகிறார். விண்வெளியில் நடக்கும் ஹாரர் கதையில் இந்த படம் தயாராகிறது. படம் முழுக்க வானவீதிகளில் நடக்கும் கதை என்பதால், ஏஞ்சல்ஸ் கெட்டப்பில் வெள்ளை நிறை உடையணிந்து நடிக்கிறார்கள். அந்த வகையில், ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோருடன் 10 முக்கிய கேரக்டர்களும் நடிக்கிறார்கள்.
மேலும், இந்த படத்தை டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. அதோடு, படத்திற்கான பிரமோஷனை பரபரப்பாக தொடங்க வேண்டும் என்பதற்காக, விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் மெர்சல் படம் வெளியாகும் தியேட்டர்களில் இந்த டிக் டிக் டிக் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.