ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் 2.O என்ற பெயரில் தயாராகி வருகிறது. ரஜினி, அக்ஷ்ய், எமி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், லைகா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம், சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக, தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது.
சமீபத்தில் 2.O மேக்கிங் வீடியோவை வெளியிட்டார் ஷங்கர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் 2.O படத்தின் புதிய தகவலை லைகாவின் ராஜூ மகாலிங்கம், தன் டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
அதில், 2.O படத்தின் இசை வெளியீடு, அக்டோபர் மாதம் துபாயிலும், டீசர், ஐதராபாத்திலும், டிரைலர், நம்ம சிங்கார சென்னையிலும் வெளியிட இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
பாகுபலி-2 படத்திற்கு பிறகு இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 2.O என்பதால், படத்தின் புரொமோஷன் வேலைகளை அக்டோபர் முதல் ஆரம்பிக்கிறது லைகா நிறுவனம்.
ஆக 2.O லோடிங்