ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஹாலிவுட் ஹீரோக்கள் ரெயான் ரெனால்ட்ஸ், சாமுவேல் ஜாக்சன் நடித்துள்ள படம் தி ஹிட்மேன் பாடிகார்ட். இவர்களுடன் கெரி ஓல்டுமேன், சல்மா ஹயாக், எலோடி யங் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தி டைரக்டர், தி லைட்டர், ரெட் ஹில், தி எக்ஸ்பண்டபிள் படங்களை இயக்கிய பேக்ரிக் ஹக்ஸ் இயக்கி உள்ளார். அல்ட்டி ஓவர்சன் இசை அமைத்துள்ளார், ஜூலீஸ்லா ஹின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் நம்ம ஊர் விக்ரம்வேதா மாதிரியான அண்டர்கிரவுண்ட் தாதாக்களின் கதை. சர்வதேச போதை மருந்து கடத்தல் மன்னனின் பாடிகார்டாக இருக்கும் ஹீரோ, தாதாவை கொல்லத் துடிக்கும் போலீஸ் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் கதை. கடந்த 18ந் தேதி அமெரிக்காவில் வெளியான இந்தப் படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 30 மில்லியன் டாலரில் உருவான படம் அமெரிக்காவில் மட்டும் 62 மில்லியன் டாலர் வசூலித்திருக்கிறது. இந்தப் படம் இந்தியாவில் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி வெளிவருகிறது. தமிழில் டப் செய்யப்பட்டு மரண நிமிடம் என்ற டைட்டிலுடன் வெளியிடப்படுகிறது.