ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சின்னத்திரையில் புகழ்பெற்ற கலைஞர்கள் சினிமாவிலும் புகழ்பெறும் காலம் இது. சிவகார்த்திகேயன், சந்தானம் என பலரைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நாயகி பிரியா பவானி சங்கரும் சினிமாவில் நடித்துள்ளார். தற்போது இவர், மேயாதமான் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் மேயாதமான் படத்தின் டீசர் வெளியானது. அதற்கு ரசிகர்கள் ஏகப்பட்ட வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக, பிரியாவின் ரசிகர்கள் அந்த டீசரைப்பார்த்து விட்டு அவரை வாழ்த்தி கமெண்ட்ஸ் கொடுத்தார்களாம். இதனால் உற்சாகத்தில் காணப்படும் பிரியாபவானி சங்கர், சின்னத்திரையில் தொடங்கிய ரசிகர்களின் வரவேற்பு சினிமாவிலும் தொடரும் என உற்சாகத்துடன் காணப்படுகிறாராம்.