ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'விவேகம், விஐபி 2' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து நாட்களில் தெலுங்கில் வெளியாக உள்ளது. அஜித் நடித்துள்ள 'விவேகம்' படம் நாளையும், தனுஷ் நடித்துள்ள 'விஐபி 2' படம் நாளை மறுநாளும் வெளியாக உள்ளன. அடுத்தடுத்த நாட்களில் இரண்டு தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாக இருப்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், தெலுங்கில் இந்த இரண்டு படங்களுமே வெளியீட்டிற்கு முந்தைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தனுஷ் நடித்துள்ள 'விஐபி 2' படத்திற்காவது சில நாட்கள் முன்பு பிரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதனாலும், தனுஷின் 'விஐபி' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'ரகுவரன் பி.டெக்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாலும் 'விஐபி 2' பற்றி ஓரளவிற்காவது ரசிகர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
'விவேகம்' தமிழ்ப் படம் தமிழ்நாட்டிலும் உலகம் முழுவதிலும் பிரம்மாண்டமாக, ஒரு பரபரப்புடன் வெளியிடப்படுகிறது. ஆனால், ஒரே சமயத்தில் தெலுங்கிலும் வெளியிடும் போது அதே அளவு பிரம்மாண்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தாமல் வெளியிடுகிறார்கள் என டோலிவுட்டில் குறைபட்டுக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் மட்டும் 'விவேகம்' தெலுங்கு படம் சுமார் 160 தியேட்டர்கள் வரை வெளியாகிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் 400 தியேட்டர்கள் வரை வெளியாகிறது என்கிறார்கள்.
இருந்தாலும் ஒரு படத்தின் வெற்றியை வெளியீட்டிற்கு முன்பு நிர்ணயிப்பது கடினம். வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பிறகே அது பெரிய படமா, சிறிய படமா என நிர்ணயிக்கப்படுகிறது. அந்த விதத்தில் தெலுங்கில் பிரம்மாண்டமான 'விவேகம்' வெற்றி பெறப் போகிறதா, அல்லது எளிமையான 'விஐபி 2' வெற்றி பெறப் போகிறதா என்பது இரண்டொரு நாளில் தெரிந்துவிடும்.