ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
11 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் காமெடிகள் இப்போதும் அரசியலுக்கும், மீம்சுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பத்திரிக்கையில் கார்ட்டூனிஸ்டாக இருந்த சிம்பு தேவன் இயக்கிய முதல் படம். வடிவேலு ஹீரோவாக நடித்த முதல் படம்.
இப்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இம்சை அரசன் 24ம் புலிகேசி என்பது படத்தின் தலைப்பு. முதல் பாகத்தை தயாரித்த சங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. லைக்கா நிறுவனம் இணை தயாரிப்பாளராகி உள்ளது. வடிவேலு ஜோடியாக அஜித்துடன் பில்லா-2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார்.
முதல் பாகத்துக்கு சபேஷ்-முரளி இசை அமைத்தனர். இரண்டாம் பாகத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். ஆர்.சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனர் டி.முத்துராஜ் அரங்கம் அமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் இன்று முறைப்படி தொடங்கியது. அரசியல் புயலில் சிக்கி தவித்து, ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் பிளாப் ஆகி நிற்கும் வடிவேலுவை இந்தப் படம் கைதூக்கி விடுமா என்பதை ஆவலுடன் கவனிக்கிறார்கள் ரசிகர்கள்.