ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்ப் பட டிரைலர்களில் யு டியூப் சாதனையில் மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது 'விவேகம்' டிரைலர். டிரைலர் வெளியான 35 மணி நேரங்களுக்குள் யு டியூபில் 4 லட்சம் லைக்குகளை இந்த டிரைலர் பெற்றுள்ளது. நேற்று நண்பகல் 12 மணிக்குள்ளாகவே 3 லட்சம் லைக்குளைப் பெற்று சாதனை படைத்த இந்த டிரைலர் அடுத்த 24 மணி நேரங்களுக்குள் மேலும் 1 லட்சம் லைக்குகளைப் பெற்றுவிட்டது.
இதுவரை 64 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள இந்த டிரைலர் விரைவில் 'விவேகம்' டீசரின் 5 லட்சத்து 36 ஆயிரம் லைக்குகளைக் கடக்கவும் வாய்ப்புள்ளது. தமிழில் பொதுவாக ஒரு படம் வெளிவருவதற்குள் அதன் டீசர், டிரைலர் ஆகிய இரண்டும் வெளியாகும். அஜித் ரசிகர்கள் டீசர் சாதனையை புதிய சாதனையாக ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்தார்கள். இப்போது டிரைலரையும் அதே போல் தொடர வைக்கிறார்கள்.
'விவேகம்' டீசர், டிரைலர் இரண்டின் பார்வைகளும் சேர்த்து இப்போது 2 கோடியே 60 லட்சம் பார்வைகளையும், 9 லட்சத்து 38 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளன. ஒரு படத்தின் டீசர், டிரைலர் இரண்டும் சேர்த்து பெற்ற லைக்குகளைக் கணக்கிட்டால் இது தனிப் பெரும் சாதனை. இன்னும் 'விவேகம்' பாடல்களின் பார்வைகள், லைக்குகளைச் சேர்த்தால் வேறு எந்த தமிழ்ப் படமும் இப்போதைக்கு இதை நெருங்க முடியாது என தாராளமாகச் சொல்லலாம்.