ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சந்தானத்தின் ஆஸ்தான ஹீரோயினாக வலம் வந்த அஸ்னா ஜவேரி, இப்போது சோகத்தில் மூழ்கியுள்ளார். இப்போதைக்கு, நாகேஷ்திரையரங்கம், பிரம்மா டாட் காம் ஆகிய, இரண்டு படங்களில் இவர் நடித்து வருகிறார். ஆனால், இந்த இரண்டு படங்களுமே, நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் உள்ளதால், ரிலீசாவதில் தாமதமாகி வருகின்றன.
பெரிதும் நம்பியிருந்த சந்தானமும், வெவ்வேறு புதுப்புது நடிகையரை, தன் படங்களுக்கு ஒப்பந்தம் செய்வதால், கவலை அடைந்துள்ளார், அஸ்னா. இதனால், தயாரிப்பு நிறுவனங்களுக்கு, தன் புகைப்படங்களை அனுப்பி, வாய்ப்பு வலை வீசி வருகிறார்.