ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமீபத்தில் தெலுங்கில் இளம் நடிகர் நிதின் நடித்த 'லை' என்கிற படம் வெளியாகி டீசன்ட்டான வெற்றியையும் பெற்றுள்ளது. ஆனால் நாயகன் நிதினை விட இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்த மேகா ஆகாஷ் தான் அதிகமான உற்சாகத்தில் இருக்கிறார்.. காரணம் கடந்த இரண்டு வருடங்களாக அவர் அனுபவித்து வந்த மன அழுத்தத்தில் இருந்து இந்தப்படம் அவரை வெளியே கொண்டு வந்து ரிலாக்ஸ் ஆக்கியுள்ளது.. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே தமிழில் ஜெயராம் மகன் காளிதாஸ் ஹீரோவாக அறிமுகமாகும் 'ஒரு பக்க கதை' படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அதில் நடித்தும் முடித்தார் மேகா ஆகாஷ்.. ஆனால் சென்சார் சிக்கல் காரணமாக அந்தப்படம் எப்போது ரிலீசாகும் என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது.. அதேபோல கௌதம் மேனன்-தனுஷ் என ஜாம்பவான்களின் கூட்டணியில் உருவான 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திலும் தான் கதாநாயகியாக ஒப்பந்தமானபோது இன்னும் அதிக நம்பிக்கையுடன் இருந்தார் மேகா ஆகாஷ்..
ஆனால் அந்தப்படமும் ரிலீசாவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.. இதனால் தமிழில் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்படும் அபாயத்தில் இருக்கிறார் மேகா ஆகாஷ். தற்போது அவரது முதல் படமாக தெலுங்கில் 'லை' வெளியானதால் சற்று தெம்பாகியுள்ளார் மேகா ஆகாஷ்.