ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
உலக அளவில் தமிழ்ப் படங்கள் வெளியானாலும், ஹாலிவுட் படங்களுடன் போட்டி போடும் அளவிற்கு இன்னும் வளரவில்லை. உலக அளவில் ஆங்கிலத்தைப் பேசுபவர்களும் தமிழைப் பேசுபவர்களை விட அதிகம். இருப்பினும் ஒரு தமிழ்ப் படம் உலக அளவில் ஹாலிவுட் படங்களுடன் சாதனை புரிகிறது என்றால் தமிழ் ரசிகர்கள் சினிமாவை எந்த அளவிற்கு நேசிக்கிறார்கள் என்று புரியும். சினிமாவையும் மீறி அவர்களது அபிமான ஹீரோக்களை எந்த அளவிற்கு நேசிக்கிறார்கள் என்பது இன்னும் அதிகமாகப் புரியும்.
மூன்று மாதங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியான விவேகம் டீசர் மூன்றே மாதங்களில் பெரும் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது. உலக அளவில் யு டியூப் லைக்குகளில் முதலிடத்தில் உள்ள டீசர், “மார்வெல்லின் அவஞ்சர்ஸ் - ஏஜ் ஆப் அல்ட்ரான்” (Marvels "Avengers: Age of Ultron"). இந்த டீசர் வெளிவந்து மூன்று வருடங்கள் ஆகிறது. இதுவரை 8 கோடி பார்வைகளும், 5 லட்சத்து 24 ஆயிரத்து 32 லைக்குகளும் இந்த டீசருக்குக் கிடைத்துள்ளன.
ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான விவேகம் டீசருக்கு இதுவரை 1 கோடியே 90 லட்சம் பார்வைகள்தான் கிடைத்துள்ளன. அதே சமயம் 5 லட்சத்து 25 ஆயிரம் லைக்குகள் கிடைத்து உலக அளவில் யு டியுப் லைக்குகளில் முதலிடத்தைப் பிடித்த டீசர் ஆக புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறது.
ஒரு தமிழ்ப் படம் இப்படி ஒரு சாதனையைப் படைத்திருப்பதும், அதற்குக் காரணம் அஜித் ரசிகர்கள்தான் என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.