ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்த் திரையுலகத்தில் தனது தனித்த முயற்சியால் நுழைந்து வெற்றி பெற்று தனக்கென தனி ரசிகர்களை வைத்திருப்பவர் அஜித்குமார். ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகும் அவர் பின்னால் இவ்வளவு ரசிகர்களா என மற்ற முன்னணி நடிகர்களையும் பொறாமைப்பட வைப்பவர் அஜித்.
வாரிசு நடிகர்கள் நிறைந்த திரையுலகத்தில் தங்களது முயற்சியால் வெற்றி பெற்று வளர்ந்து நிற்கும் நடிகர்களில் ரஜினிகாந்திற்கு அடுத்து பெயர் வாங்கியிருப்பவர் அஜித் மட்டுமே. அவர் திரையுலகத்திற்குள் நடிகராக தன்னுடைய முதல் கையெழுத்தை பதிவிட்ட நாள் இன்று.
25 வருடங்களுக்கு முன்பு 1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தெலுங்குப் படமான பிரேம புஸ்தகம் படத்தில் நடிப்பதற்காக அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாள். அந்தப் படத்தில் நடித்த பின்னர் தான் தமிழில் அமராவதி படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால், பிரேம புஸ்தகம் படத்திற்கு முன்னதாகவே அமராவதி படம் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை படிப்படியாக உயர்ந்து நிற்கிறார் அஜித்.
இந்த 25 வருடங்கள் பல தோல்விகள், பல திருப்பங்களைச் சந்தித்து அவருக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறார். “ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், வாலி, அமர்க்களம், நீ வருவாய் என, முகவரி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ரெட், வில்லன், வரலாறு, கிரீடம், பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம் வரை” எத்தனையோ விதமான படங்கள், கதாபாத்திரங்கள் என அவருடைய ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு படத்திற்குப் படம் தன்னை உயர்த்திக் கொண்டு வருகிறார்.
அஜித்தின் இந்த 25 வருட பயணத்திற்கு திரையுலகத்தைச் சேர்ந்த தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
பொதுவாக ஒரு நடிகரின் படம் வெளியான நாளிலிருந்து தான் அவருடைய திரையுலகப் பயணத்தைக் கணக்கில் கொள்வார்கள். ஆனால், அஜித் ரசிகர்களுக்கு அஜித் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயமும் கொண்டாட்டமாக இருக்கிறது என்பதற்கு இந்த திரையுலக முதல் கையெழுத்து கொண்டாட்டமும் ஒரு உதாரணம்.