ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்த ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதையடுத்து உதயநிதிக்கு ஜோடியாக பொதுவாக எம் மனசு தங்கம் படத்தில் நடித்திருப்பவர், தற்போது ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்து வருகிறார். விண்வெளியில் நடக்கும் கதையில் இப்படம் தயாராகி வருகிறது.
இதுபற்றி நிவேதா பெத்துராஜ் கூறுகையில், "ஒருநாள் கூத்து என்ற முதல் படமே எனக்கு ஹிட்டாக அமைந்தது. அதனால் ஓரளவு கவனிக்கப்படும் நடிகையான நான், பொதுவாக எம் மனசு தங்கம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். உதயநிதி நாயகனாக நடித்துள்ள அந்த படத்தில் பார்த்திபனின் மகளாக நடித்திருக்கிறேன். ஜெயம் ரவியுடன் நடித்து வரும் டிக் டிக் டிக் படத்தில் வெயிட்டான ரோலில் நடித்திருக்கிறேன்.
இதையடுத்து வெங்கட்பிரபுவின் பார்ட்டி படத்திலும் நடிக்கிறேன். குறிப்பாக, டிக் டிக் டிக் படம் வரும்போது கண்டிப்பாக நான் கவனிக்கப்படும் நடிகையாக இருப்பேன் என்று அடித்து சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்.