ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தினால் அறிமுகம் செய்யப்பட்டவர் ஜாங்கிரி மதுமிதா. முதல் படத்திலேயே கவனிக்கப்படும் நடிகையான அவர், அதையடுத்து சில படங்களில் சந்தானத்துடன் நடித்தார். என்றாலும், தான் ஹீரோவான பிறகு மதுமிதாவை மறந்து விட்டார் சந்தானம். அதனால் அதற் கடுத்தபடியாக முன்னணி காமெடியனான சூரியுடன் நடிப்பதற்காக கடும் முயற்சி எடுத்து அவர், சில படங்களில் நடித்தார் என்றாலும், அவரால் சூரியுடன் தொடர்ந்து நடிக்க முடியவில்லை.
இந்தநிலையில், தற்போது விக்ரம்-தமன்னா நடித்து வரும் ஸ்கெட்ச் படத்தில் மீண்டும் சூரியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் ஜாங்கிரி மதுமிதா. இந்த படத்தில் பைக் திருடனாக நடித்துள்ள விக்ரமிற்கு, யாராவது புது பைக் வாங்கியதை அறிந்தால் ரகசியமாக தகவல் கொடுக்கும் நண்பனாக நடித்துள்ளார் சூரி. அவ ருக்கு மனைவியாக நடித்திருக்கிறார் மதுமிதா. அந்தவகையில், இதற்கு முன்பு அவர்கள் இணைந்து நடித்த படங்களின் காமெடி காட்சிகளை விட இந்த படத்தில் சூரி-மதுமிதாவிற்கான காமெடி டிராக் பொரிய அளவில் ஒர்க்அவுட்டாகியுள்ளதாம். அதனால் இந்த படத்திற்கு பிறகு சூரியுடன் தொடர்ந்து நடிப்ப தற்கான சந்தர்ப்பங்கள் கூடிவரும் என்று எதிர்பார்க்கிறார் மதுமிதா.