ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒருநாள் கூத்து படத்தில், அடியே அழகே பாடல் மூலம், தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். மலையாளம், ஹிந்தி மொழிகளில் இருந்து, கோலிவுட்டுக்கு நடிகையர் படையெடுத்து வரும் இந்த காலத்தில், 'அக்மார்க்' தமிழ் பெண்ணான நிவேதாவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சரியான வாய்ப்புக்காக காத்திருந்த இவர், பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக, கிராமத்து பெண்ணாக, வாழ்ந்து காட்டியுள்ளாராம். இதுதவிர, வெங்கட் பிரபுவின் புதிய படமான, பார்ட்டியிலும், முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 'கோலிவுட்டில், தமிழ் ஹீரோயின்களாலும் கோலோச்ச முடியும் என்பதை நிரூபித்து காட்டுவேன்' என, நம்பிக்கையுடன் கூறுகிறார், நிவேதா.