ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குநரும், நடிகருமான தம்பி ராமையாவின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'அதாகப்பட்டது மகாஜனங்களே'. விஜய் டி.வி.யில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணிபுரிந்த இன்பசேகர் இயக்குநராக அறிமுகமாகும் படம். இந்த படத்தில் உமாபதிக்கு ஜோடியாக ரேஷ்மா ரத்தோர் நடித்துள்ளார். இவர்களுடன் 'ஆடுகளம்' நரேன், பாண்டியராஜன், மனோபாலா முதலானோர் நடிக்க, பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.
'அட்டக்கத்தி', 'குக்கூ' முதலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.கே.வர்மா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தை வெளியிட பலமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் கிடைக்காததினால் படத்தை வெளியிட முடியவில்லை.
இந்நிலையில் நாளை 150-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகவிருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் கௌதம் கார்த்திக் நடித்துள்ள இவன் தந்திரன் படத்துக்கு ரிப்போர்ட் பாசிட்டிவ்வாக உள்ளதால் தியேட்டர்காரர்கள் அந்தப் படத்தை திரையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனாலோ என்னவோ 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்துக்கு 75 தியேட்டர்கள் கூட கிடைக்கவில்லை.